சென்னை தினம் ஆண்டு தோறும் சென்னையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383வது நாள் வரும் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற உள்ள சென்னை தின கொண்டாட்டத்தில் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் இதனை ஒட்டி பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நேரம், தேதி, நிகழ்வு குறித்த விளக்கம் அனைத்தையும் இங்கு பார்க்கலாம்.



என்னென்ன நிகழ்வுகள் நடக்க உள்ளன?


கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளதாகவும், சென்னை தின சிறப்பு ஏற்பாடாக எலியட்ஸ் கடற்கரையில் உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய இடங்களில் செல்பி பூத்கள், இயற்கை உரங்கள், கொரோனா தடுப்பூசி முகாம் என ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளின் நேர அட்டவணை, என்னென்ன எப்போது எப்படி நடக்கப் போகிறது என்ற முஜு விபரம் இங்கே. 


தொடர்புடைய செய்திகள்: Twins Namitha : எனக்கு இரட்டை குழந்தைகள்.. நமீதா சொன்ன ஹேப்பி நியூஸும், நெகிழ்ச்சி கதையும்..


ஆகஸ்ட் 21 (ஞாயிறு): SPB க்கு அஞ்சலி - நடிகரும் எழுத்தாளருமான மோகன் வி ராமன் பேச்சு. இடம்: ஜிஆர்டி கன்வென்சன் சென்டர், தி நகர்.


ஆகஸ்ட் 22 (திங்கள்): திலீப் குமார்: கதைகளுக்கான சைன்போர்டுகள், ஒரு பயணம். நீதிபதி பிரபா ஸ்ரீதேவனுடன் எழுத்தாளர் திலீப் குமார் உரையாடல் இடம்: அஷ்விதாஸ், மயிலாப்பூர்


மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரை: தமிழ்வழிப் பள்ளி மாணவர்களுக்கான தமிழில் சென்னை வினாடி வினா இடம்: ரானடே நூலகம், மயிலாப்பூர்.


ஆகஸ்ட் 23 (செவ்வாய்கிழமை): வரலாற்றாசிரியர் மற்றும் மெட்ராஸ் மியூஸிங்ஸ் ஆசிரியர் ஸ்ரீராம் வி, முன்னோடி சமூக சேவகர் பூனம் நடராஜனுடன் உரையாடல் இடம்: பாசிபிலிடீஸ் மியூசியம், டிரிப்ளிகேன்.


மாலை 5 மணி: பேச்சு மற்றும் விளக்கக்காட்சி: "மாமல்லபுரம் - வெறும் செஸ் மட்டும் அல்ல" என்ற தலைப்பில். இடம்: பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, தரமணி.



ஆகஸ்ட் 24 (புதன்கிழமை): மானுவல் ஆரோனுடன் டெட் எ டெட்: செஸ் ஜாம்பவான் மேனுவல் ஆரோனுடன் கிரிக்கெட் வர்ணனையாளர் சுமந்த் ராமன் உரையாடல் இடம்: ஹோட்டல் மார்ஸ், கதீட்ரல் ரோடு


காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை: காதுகேளாத கலைஞர்களின் படைப்புகளின் கண்காட்சி. இடம்: பாசிபிலிடீஸ் மியூசியம், மெரினா கடற்கரைக்கு அருகில்.


ஆகஸ்ட் 25 (வியாழன்): மதராஸிலிருந்து சமையல் குறிப்புகள்: மெட்ராஸ் நகரத்தின் ஒருங்கிணைந்த சமூகங்களின் தாக்கங்களைக் கண்டறிதல். ராகேஷ் ரகுநாதன் பேசும் இடம்: ஹனு ரெட்டி குடியிருப்பு.


மாலை 6.45 முதல் 7.45 வரை: மெரினாவின் பாரம்பரியம் குறித்த பேச்சு. இடம்: ஆர்கே கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.


ஆகஸ்ட் 26 (வெள்ளிக்கிழமை): மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை - கல்கியின் பொன்னியின் செல்வன் மேடையேற்றம்: கலைஞரும் இயக்குனருமான பிரவின் கண்ணனூர் பேச்சு இடம்: ஹோட்டல் சவேரா, மயிலாப்பூர்.


மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை: தமிழ் சினிமா இசையில் ஆக்டிவிசம்: திரைப்பட தயாரிப்பாளர் கே ஹரிஹரன் மற்றும் இசை தயாரிப்பாளர் சுபஸ்ரீ தணிகாசலம் தொகுத்து வழங்கும் நேரடி இசை நிகழ்ச்சி இடம்: கோதே இன்ஸ்டிட்யூட் ஆடிட்டோரியம், மேக்ஸ் முல்லர் பவன், ரட்லாண்ட் கேட்.


ஆகஸ்ட் 27 (சனிக்கிழமை): மாலை 4 முதல் 6 மணி வரை – டிஜிட்டல் சென்னை: டிஜிட்டல் அலையில் சென்னை நிறுவனங்கள் எப்படி சவாரி செய்கின்றன. விகாஸ் சாவ்லா (இணை நிறுவனர், சோஷியல் பீட்) மற்றும் ஜெகதீஷ் குமார் (இணை நிறுவனர், வேளி) ஆகியோரைக் கொண்ட குழு விவாதம்.


6.30 முதல் 8 மணி வரை: நேச்சர் வாக் - ஷோர் வாக் எலியட்ஸ் பீச். இடம்: கார்ல் ஷ்மிட் நினைவுச்சின்னம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.