சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.


உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி முன்னதாக பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து எம்.துரைசாமி நியமனம் செய்யப்பட்டார்.


கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத்  பண்டாரி பொறுப்பேற்றார். முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், பின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.


 






நேற்று செப்.12ஆம் தேதி அவருக்கு 62 வயது நிறைவடைவடைந்த நிலையில், மாலையுடன் ஓய்வு பெற்றார்.


அதையடுத்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. பின்னர் கடந்த மாதம் பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்.


நேற்று மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு  பிரிவு உபசார பாராட்டு விழா நடைபெற்றது.


 






தொடர்ந்து முனீஸ்வர்நாத் பண்டாரிஓய்வு பெற்றதையடுத்து,  மூத்த நீதிபதி எம்.துரைசாமி  அவர்களை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று அவர் பொறுப்பு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.