காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவானது வரும் அக்டோபர் 6 மற்றும்  9 தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெற உள்ளது.



காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள் பொது தனியார்துறை உள்ள அனைத்து நிறுவனங்களில் தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கவேண்டும். அன்றைய தினம் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் பெற தொழிலாளர் துறை, தொழிலாளர் ஆணையரால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்தல் நாளான 6 மற்றும் 9 ஆம் தேதி ஆகிய 2 நாட்களிலும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.




காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் (9778619552), தொழிலாளர் துணை ஆய்வர் கமலா (9952639441), தொழிலாளர் உதவி ஆய்வர் மாலா (9790566759), பரங்கிமலை தொழிலாளர் உதவி ஆய்வர் சிவசங்கரன் (94441 52829), காஞ்சிபுரம் முத்திரை ஆய்வர் வெங்கடாச்சலம் (9444062023)ஆகிய செல்போன் எண்களிலும் 044-27237010 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.


செங்கல்பட்டு




செங்கல்பட்டு மாவட்டத்தில், பரங்கிமலை தொழிலாளர் துணை ஆய்வர் மனோஜ் ஷியாம் சங்கர் (8667570609), செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆய்வர் பிரபாகரன் (9944214854) மதுராந்தகம் தொழிலாளர் உதவி ஆய்வர் பொன்னிவளவன் (9789253419), தாம்பரம் தொழிலாளர் உதவி ஆய்வர் வெங்கடேசன் (8870599105), செங்கல்பட்டு முத்திரை ஆய்வர் சிவராஜ் (7904593421), பரங்கிமலை முத்திரை ஆய்வர் வேதநாயகி (9884264814) ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 


இந்தத்  தேர்தலில் மொத்தம் 80,819 தேர்தலில் களத்தில் உள்ளனா். இவா்களுக்கு ஆதரவாகவும் அரசியல் கட்சித் தலைவா்களும், தொண்டா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 17,662 பதவிகளுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (அக்.6) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில், கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 முதல் 6 மணி வரை பாதுகாப்பு கவச உடை அணிந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.