தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புதிதாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சியின் வேட்பாளர்களுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வத்துடன் போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



 


அவ்வகையில் 44 ஆவது வார்டு பகுதியில் போட்டியிடும் இளம் வேட்பாளர் சிவசண்முகம் கொரோனா காலம் என்பதால் வாக்காளர்களின் வீடுகளுக்கு தனி ஒருவராக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும், இவர் வேதாசலம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தான் நம் பகுதியின் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் வாக்காளரிடம் சத்தியம் செய்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.




 




மேலும் சுயேட்சை வேட்பாளர் சிவசண்முகம் அரசியல் கட்சிகளைப் போல பந்தா இல்லாமல் தனியாக சென்று தேர்தல் நடத்தை விதி பின்பற்றி நோட்டீஸ் வழங்கி பொதுமக்களிடம் தான் செய்ய இருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கி வீடுதோறும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் என்றாலே கூட்டமாக சென்று வாக்கு கேட்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கும் இந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் சிவசண்முகத்தின் பிரச்சாரம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இளம் சுயேட்டசை வேட்பாளர் ஒருவர் சத்தியம் செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிப்பது வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தங்களது ஆதரவு இருக்கும் என உறுதியளித்து இன்முகத்தோடு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




 




ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண