காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தப்படுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்காட்டமாக உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 160 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1230 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 80 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் 199 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1449 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த 15 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 22ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
திராவிட முன்னேற்றக் கழகம்
இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஒன்றியம் வாரியாக கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு விவரம் பின் வருமாறு :
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்கள் உள்ளன. அவற்றில் திமுக 15 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 3 - காங்கிரஸ் (பெரும்பாக்கம்) போட்டியிடுகிறது.
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்
அச்சரப்பாக்கம் ஒன்றியம்
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 18 இடங்கள் உள்ளன. அவற்றில் திமுக 17 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கி உள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 2 மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஒன்றியம்
மதுராந்தகம் ஒன்றியத்தில் 22 இடங்கள் உள்ளன. அவற்றில் திமுக 19 இடங்களில் போட்டியிடுகிறது . மூன்று இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 1 (மாமண்டூர்) காங்கிரஸ் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐஎம்) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 5 இல் போட்டிருக்கிறது. மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 17 (ஜமீன் எண்டத்தூர்) போட்டியிடுகிறது.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம்
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 26 இடங்கள் உள்ளன. அவற்றில் 21 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டு எண் 23 மற்றும் வார்டு எண் 10 ஆகிய இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டு எண் 12 மற்றும் வார்டு எண் 26 ஆகிய இடங்களில் விசிக போட்டியிடுகிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 6 இல் மதிமுக போட்டியிடுகிறது.
சித்தாமூர் ஒன்றியம்
சித்தாமூர் ஒன்றியத்தில் 16 இடங்கள் உள்ளன. அவற்றில் திமுக 12 இடங்களில் போட்டியிடுகிறது. 4 இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
விடுதலை சிறுத்தை கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டு எண் 6 ( தண்டலம் ), வார்டு 8 (நெற்குணம் ), வார்டு எண் 12 ( கடுக்கலூர் ) ஆகிய இடங்களில் விசிக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 3 இல் போட்டியிடுகிறது.
இலத்தூர் ஒன்றியம்
இலத்தூர் ஒன்றியத்தில் 15 இடங்கள் உள்ளன. திமுக 13 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 2 காங்கிரஸ் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 5 (கூவத்தூர்) இல் போட்டிருக்கிறது.
புனித தோமையர்மலை ஒன்றியம்
புனித தோமையர் மலை ஒன்றியத்தில் 11 இடங்கள் உள்ளன. 11 இடங்களிலும் திமுக போட்டி இடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்
காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் 24 இடங்கள் உள்ளன. அவற்றை திமுக 22 இடங்களில் போட்டியிடுகிறது. 2 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 3 (வண்டலூர்) மதிமுக போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 20 ( பழவேலி ) மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
திருப்போரூர் ஒன்றியம்
திருப்போரூர் ஒன்றியத்தில் 22 இடங்கள் உள்ளன. அவற்றில் திமுக 19 இடங்களில் போட்டியிடுகிறது. மூன்று இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 14 இல் (நெம்மேலி) காங்கிரஸ் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 18 (கரும்பாக்கம் ) இல் போட்டியிடுகிறது. இதர கூட்டணிக் கட்சிக்கு ஓரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஒதுக்கீடு விவரம்
மாவட்ட வார்டு உறுப்பினர்கள் - 16
திமுக - 15
காங்கிரஸ் -1
ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் - 154
திமுக - 134
காங்கிரஸ் -6
மதிமுக - 4
விசிக - 7
சிபிஐஎம் - 2
இதர - 1
வேட்பாளர் பட்டியலை பார்க்க :-