செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நெடுஞ்சாலைத்துறை சார்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் முன்னிலையில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் அமைச்சர் எ.வ.வேலு  தொடங்கி வைத்தார்.

 



சகோ-கோ சேஃப்

 

 

இதன்பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “நெடுஞ்சாலை துறையினால் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலமாக போக்குவரத்து, சுகாதாரம், காவல் மற்றும் பள்ளிக் கல்வித்துறைகளின் ஒருங்கிணைப்புடன் சாலை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை மேம்படுத்த பலவிதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு அங்கமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக பள்ளி குழந்தைகளிடம் சாலை பாதுகாப்பு திட்டத்தை பற்றிய வடிவமைப்பும் மற்றும் விழிப்புணர்வு வளர்ச்சியடைய செய்யவும், விழிப்புணர்வு திட்டத்தை முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் செயல்படுத்தவும் ஒரு ஆலோசகரை நியமித்துள்ளது. சாலை பாதுகாப்பு திட்டத்தை நட்புறவுடன் இயக்கும் விதமாக இத்திட்டத்திற்கு சகோ-கோ சேஃப் (SaGo - Gosafe) என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வடிவமைத்து உருவாக்கம் செய்ய தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டத்தால் ஒரு அனுபவம் வாய்ந்த ஆலோசக நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது

 

261 பள்ளிகளில்....

 

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பள்ளிகளில் சகோ-கோ சேஃப் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படும். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அமைந்துள்ள 261 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் வெற்றியின் மூலம் தமிழ்நாடு அரசு ஒப்புதலுடன் தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என  தெரிவித்தார்.



 

மேலும் பேசுகையில், “இப்பொழுது இருக்கும் சூழலில் பொதுமக்கள் பலரும் கார் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. எனவே சாலை விரிவாக்கம் உள்ளிட்டவை அவசியமாகிறது. கார்கள் கூடியிருக்கின்றன சாலை விரிவாக்கம் இல்லை, சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னால்,  நிலம் இல்லாதவன் கூட பச்சை துண்டு போட்டு கொண்டு போராட வந்து விடுகிறான்” என தெரிவித்தார்.

 

போக்குவரத்து விதிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்

 

இன்றைக்கு இருக்கும் நிலைமைக்கு இன்றைக்கு இருக்கும் உற்பத்தி திறனை வைத்து பார்க்கும் பொழுது, சாலைகளை விரிவுபடுத்தி தான் ஆக வேண்டும். சாலை விரிவாக்கம் செய்தால் தான் பயன்பாட்டில் இருக்கும் கார்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் கார்கள் ஆகியவற்றை பயன்படுத்த முடியும். இரண்டு வழி சாலைகள் நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும். அப்பொழுது இரு புறங்களிலும் நிலங்களை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். கையகப்படுத்துவது எதற்காக கார்கள் போவதற்காக, கார்கள் எதற்காக மக்கள் பயன்பாட்டிற்காக. போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தான், விபத்துக்கள் கூடுதலாக போய்க்கொண்டிருக்கிறது. போக்குவரத்து விதிகளை தெரிந்தவர்களுக்கு மட்டுமே லைசன்ஸ் கொடுக்க வேண்டும். போக்குவரத்து சமைக்கைகள் அனைத்தும் தெரிந்தவருக்கு லைசென்ஸ் கொடுக்க வேண்டும்.  விபத்து இல்லாமல் சாலையை உருவாக்க தமிழக முழுவதும் நான் 400 பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

 



 

முன்னதாக, பள்ளி மாணவ/மாணவியர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த சகோ-கோ சேஃப் (SaGo - Gosafe) விழிப்புணர்வு கையேட்டினை  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு  வெளியிட  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன்  பெற்றுக்கொண்டார். மேலும், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி மாணவ/மாணவியர்களிடம் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் , நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர், தபிரதீப் யாதவ் இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர், ப.கணேசன் இ.ஆ.ப., , சென்னை -கன்னியாகுமரி தொழில் தட திட்ட இயக்குநர் பி.என்.ஸ்ரீதர் இ.ஆ.ப.,, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., ஒரு லிட்டர் கலந்து கொண்டனர்.