சென்னையை அடுத்த பாடியில் 9 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு பெற்றோர்கள் காரணம் கிடையாது. ஆசிரியர்கள் தான் காரணம் என்று அந்த மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


சென்னை அம்பத்தூரை அடுத்த பாடியில் 14 வயதான மாணவன் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். இவருக்கு , 18 வயதான அண்ணன் ஒருவர் இருக்கிறார். இவர், தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். 


இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவரின் பெற்றோர் காலையில் வேலைக்கு கிளம்பிய நிலையில், இவரது அண்ணாவும், இவரும் வீட்டு கதவை பூட்டி விட்டு கல்லூரி, பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை கல்லூரி படிப்பு முடித்து வீட்டிற்கு இவரது அண்ணா வந்த போது, அங்கு அந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இருந்தான். இதனை கண்ட அண்ணன் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து கொரட்டூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   



இந்த நிலையில் மாணவன் தற்கொலை செய்துகொள்வது முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில், “என்ன பள்ளி ஆசிரியர்கள் அடித்து கொடுமை படுத்துவதாகவும் இதனால் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் கை அறுத்துகொண்டு சாக போகிறேன். இந்த உலகத்தை எனக்கு பிடிக்கவில்லை என பதிவிட்டுள்ளார். தனது சாவுக்கு பெற்றோர்கள் காரணம் அல்ல. முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் ,பள்ளி அராஜகம் செய்வதாகவும் குறிப்பிட்ட மாணவன் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியுள்ளார்.


தன்னை சென்னையில் புதைக்க வேண்டாம் எரிக்க வேண்டாம் நகரி அங்க தான் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டுமென உருக்கமான வீடியோவில் பேசியுள்ளார். 


மேலும் மற்றொரு வீடியோவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி அங்குதான் தூக்கு மாட்டிக்கொள்ள போறேன். இப்படிக்கு உங்களிடம் இருந்து விடைபெறுவது என்று அவரது பெயரையும் குறிப்பிட்டார். முன்னதாக தந்தை கண்டித்ததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டர் என புகார் அளிக்கப்பட நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி, திருவள்ளூர் மாணவி ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050