Koyembedu Market: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 25-ஆம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று கோயம்பேடு சந்தை. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இங்கு வருகின்றன. வரும் 24-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வருகிற 25-ஆம் தேதி விடுமுறை என அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகள் சொந்து ஊருக்கு சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் கோயம்பேடு பூ மற்றும் பழ மார்க்கெட் தீபாவளி அன்றும் வழக்கம் போல் செயல்படும் என பூ மார்க்கெட் வியாபாரிகளின் சங்கத் தலைவர் முக்காண்டி மற்றும் பழ மார்க்கெட் வியாபாரிகளின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடந்த சற்று அதிகரித்துள்ளது. முக்கியமாக சின்ன வெங்காயத்தின் விலை அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதுபோன்று திண்டுக்கல் காய்கறி சந்தையில் சின்ன வெங்காயத்தின் வைல ரூபாய் 100-ஐ எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது ரூபாய் 100-ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தீபாவளி முடியும் வரை விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Also read Diwali Special Show: அசத்தலாக களைகட்டும் தீபாவளி..தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி....!