அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி உண்டா என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. 


இதுகுறித்துக் கல்வியாளர்கள் சங்கமத்தின் நிறுவனரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான சிகரம் சதீஷ் கூறும்போது, ''தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் 3,000 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.


தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை


ஆனால் தற்போது மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கே மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் குறித்த முறையான வரையறைகள் இன்னும் தெளிவுற சொல்லப்படாததால், தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ 2009  சட்டத்தின்படி, எல்கேஜி வகுப்பில் மட்டும் அரசு நிதியுதவியின் மூலம் சேர்வதற்கு சுமார் 1,40,000 குழந்தைகள் விண்ணப்பித்துள்ளனர் என்கிற விவரம் வெளியாகி உள்ளது.


அரசுப் பள்ளிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. ஜூன் 13ஆம் தேதிதான் சேர்க்கை தொடங்குகிறது. அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், இதுகுறித்து அரசு கவனம் செலுத்த வேண்டியது அதிமுக்கியமான ஒன்றாகும்.


அரசுப் பள்ளிகளை வளர்க்க வேண்டுமெனில் ஆசிரியர்கள் நினைத்தால் மட்டும் போதாது. அதற்குரிய வழிகாட்டல்களை உரிய நேரத்தில் பள்ளிக் கல்வித்துறை வழங்க வேண்டும்.




வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு


அரசுப் பள்ளியில் படித்தால் 7.5% இட ஒதுக்கீடு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் கிடைக்கும் என்னும் நிலையில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளியில் படித்தால் தமிழ்நாட்டின் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்த்தாலே அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் வரிசையில் நிற்பார்கள். 


இந்தத் தகவலை முதலமைச்சரோ, அமைச்சர்களோ, சிறிய அறிவிப்பில், விளம்பரங்களில் பெற்றோர்களிடம் கொண்டுசேர்க்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சிகரம் சதிஷ் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: Pride Month 2022 : LGBTQAI+ கொடியின் அர்த்தம் தெரியுமா ? பிரைட் மாதத்தின் வரலாறு தெரிஞ்சுக்கோங்க!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண