Kilambakkam skywalk: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை 400 மீட்டர் நீளத்திற்கு, 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள உயர்மட்ட நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - kilambakkam new Bus Stand
சென்னையில் இருந்து, தென்மாவட்ட மக்களுக்கு செல்பவர்களுக்கு என பிரத்தேக பேருந்து நிலையமாக, சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிளாம்பாக்கத்திற்கு ரயில் நிலையம் இல்லாதது கிளாம்பக்கத்திற்கு வரும் பயணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - Kilambakkam a new Railway Station
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்னக ரயில்வே உதவியுடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான 80% பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதமே முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டிய ரயில் நிலையம், பல்வேறு நிர்வாக சிக்கல் காரணமாக தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்மட்ட நடை பாதை - kilambakkam sky walk bridge
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில், இருந்து பேருந்து நிலையத்தின் மையப் பகுதி அடையும் வகையில், 400 மீட்டர் நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவற்றின் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை அமைக்கப்படும் உயர்மட்ட நடைபாதை சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது.
திடீரென வந்த பிரச்சனை
கிளாம்பாக்கம் நடைமேம்பாலம் அமைப்பதற்காக 45 சென்ட் இடத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. நடை மேம்பாலம் பணிகள் அமைக்கப்படுமா என சந்தேகம் இருந்தது.
இந்தநிலையில் கையகப்படுத்த வேண்டிய நிலத்திற்கான பணிகளை தவிர்த்து மற்ற இடங்களில் நடை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகள் அடுத்த சில மாதங்களின் முடிக்கப்பட்டு, நடை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.