கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்தை சிறைபிடித்து பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

 

Kilambakkam bus terminus, Chennai (கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்)

 

தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.

 

தென் மாவட்டத்திற்கு பேருந்துகளை இயக்குவதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து,  பயணிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இழந்து வண்ணம் உள்ளன. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்து ஒரு மாதத்தை நெருங்கி வரும் நிலையில், பயணிகள் தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.

 


அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்றதால் காலியாக உள்ள சேர்கள்


 

திருவண்ணாமலை நோக்கி மக்கள்

 

இந்தநிலையில் நேற்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில், கிரிவலம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை செல்வது வழக்கம். நாளை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை, விட அதிக அளவு பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.



 

கூட்ட நெரிசல்

 

கிளாம்பாக்கத்திற்கு மாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்தில் கூட்ட நெரிச்சலுடன் காணப்பட்டது. ஆனால் சரியான பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகள் முழுவதும் கூட்டத்துடன் காணப்பட்டது. நின்று கொண்டும் படியில் தொங்கிக்கொண்டும் பலர் பயணம் செய்தனர். அப்பொழுதும், பேருந்துகள் முறையாக இல்லாததால் அதை பலர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரியும் என்ன செய்வது தெரியாமல் பயணிகள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் , அங்கிருந்து தப்பித்து சென்றால் போதும் என அங்கிருந்து அதிகாரியும் ஓடியது பயணிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து பேருந்துகளை மறித்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தலா பரபரப்பு ஏற்பட்டது.



இதன் அடுத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். ஏற்கனவே, பொங்கல் பண்டிகையின்பொழுது , பேருந்துகள் இயக்கப்படவில்லை என கிளாம்பாக்கத்தில் பயணிகள் பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. போராட்டத்திற்கு பிறகு சில பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 



இது குறித்த பயணிகள் தெரிவித்ததாவது : திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொழுது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அதிக அளவு பயணிகள் வரும்பொழுது அதை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. கோயம்பேட்டில் இருந்து சில பேருந்துகளும் இங்கிருந்து சில பேருந்துகளும் இயக்கப்படுவதால் இந்த சிக்கல் நிலவுகிறது. இந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.