காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கக்கூடிய, வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. 

 

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் வருகின்ற 2 -6- 23 ( நாளை) அன்றும் திருத்தேர் வீதி உலா 6-2-23 அன்று  நடைபெற உள்ளதை ஒட்டி காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை பூந்தமல்லி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் புதிய ரயில் நிலையம் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

வேலூர் திருத்தணி திருப்பதி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் ஒளி முகமது பேட்டை சந்திப்பு தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

 

உத்திரமேரூர் கீழ் ரோடு மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் ஓரிக்கை தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

 

தாம்பரம் செங்கல்பட்டு பழைய ரயில் நிலையம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

 

திருச்சி, விழுப்புரம், செய்யாறு செல்லக்கூடிய பேருந்துகள் செவிலிமேடு சந்திப்பு தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 







வைகாசி மாத பிரம்மோற்சவம் ( Vaikasi Brahmotsavam 2023 Dates )


ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மோற்சவ விழாவின், இரண்டாம் நாள் காலை ஹம்ஸ வாகனத்தில் வீதி உலா, மாலை சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா.


ஜூன் இரண்டாம் தேதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் காலை கருட சேவை (garuda seva) நடைபெறுகிறது. அன்று மாலை அனுமந்த் வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.


பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாள் காலை சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் காட்சியளிக்கிறார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.


ஜூன் நான்காம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள். அதிகாலை தங்க பல்லாக்கு வாகனத்தில் (ஸ்ரீநாச்சியார் திருக்கோலம்) காட்சியளிக்கிறார். மாலை யாளி வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.









ஏழாம் நாள் திருத்தேர் ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் (kanchipuram vaikuntha perumal chariot ) எழுந்தருதல் மற்றும் திருத்தேரில் இருந்து எழுந்தருதல்  ஆகிய விழா நடைபெறுகிறது.


பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள், திருபாதஞ்சாவடி திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை. மாலை குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்


பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாள் பல்லாக்கு, மட்டை அடி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு புண்ணியகோடி விமானத்தில் காட்சியளிக்கிறார்.


9ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழாவில், பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம் காட்சியளிக்கிறார்.