Vadakkupattu Excavation: தங்கம் கிடைத்த வடக்குப்பட்டு பகுதியில் 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி...! நாளை துவக்கம்!

Kanchipuram archaeological site : "அகழாய்வு பணிகள் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது "

Continues below advertisement

வடக்குப்பட்டு அகழாய்வு ( vadakkupattu archaeological site )

காஞ்சிபுரம் மாவட்டம்  குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில், சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன. மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் , தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன.
 
பழங்கால கட்டிடம்
இந்த அகழ்வாழ்வு பணியின் பொழுது,  சில நாட்களிலேயே பழங்கால கட்டிட அமைப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. பழைய கற்களை பயன்படுத்தி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இதனைத் சுற்றி தோண்டியபோது பழங்கால கல் மணிகள், கண்ணாடி மணி, எலும்பு, செம்பு காசு, பானையோடுகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
 
தங்க அணிகலன்
 
இதனைத் தொடர்ந்து அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்டபோது, ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள், ரவுலட் ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் 0.8 கிராம் எடையுள்ள தங்க அணிகலன்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  மேலக இந்த பகுதியில் சிறிய இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1000 முதல் 1200 கற்கருவி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சிரியத்தை  ஏற்படுத்தியிருந்தது.  பழங்கற்கால கருவிகளை வைத்த பார்க்கும் பொழுது இந்தப்பகுதியில் குறைந்தபட்சம் 12,000 முதல் ஒன்றரை லட்சம் ஆண்டுகள் முன்பு வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதல்கட்ட அகழாய்வில் கிடைந்த பொருட்களை வகைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
 
தொடர்ச்சியாக வாழ்ந்த மனிதர்கள்
 
 பெரும்பாலான இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பொழுது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்படும். ஆனால், அதற்கு மாறாக இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின்படி, தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் மனிதர் வாழ்ந்ததற்கான தடயம் உள்ளது. தற்பொழுது கூட அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகிலேயே பொதுமக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தனர்.
 

 
 
 
இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள்
 
இந்த நிலையில், மேலும் இந்த பகுதியில் பல பொருட்கள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள், தெரிவித்து வந்த நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனையடுத்து   மே மாதம் 19 ஆம் தேதி , இந்திய தொல்லியல் துறை கண்கானிப்பாளர் மு. காளிமுத்து தலைமையில் இரண்டாம் கட்ட  அகழாய்வுப் பணி துவங்க உள்ளது.  அகழாய்வு பணிகள் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்கள் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் நடைபெற்று வருவது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது , காஞ்சிபுரம் வடக்குப்பட்டு பகுதில் , முதல் கட்ட அகழ்வாராட்சியில் அதிக அளவு பொருட்கள் கிடைத்ததால் ,  தற்பொழுது  ஆய்வாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது போன்ற அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola