சென்னை ரிசர்வ் வங்கி பணம் 

 

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து இரண்டு வாகனங்களில் விழுப்புரம் பகுதியில் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு கொண்டு செல்வதற்காக சுமார் 535 கோடி ரூபாய் பணமானது சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தாம்பரம் சானடோரியம் கடந்து தாம்பரம் சித்த மருத்துவமனை அருகில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு வாகனங்களில் ஒரு வாகனத்தில் திடீரென புகை வந்து வாகனம் பழுதடைந்துள்ளது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



 

535 கோடி ரூபாய் 

 

535 கோடி ரூபாய் பணத்திற்கு பாதுகாப்பிற்காக ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் , ஒரு சப் இன்ஸ்பெக்டர் என மொத்தம் 17 போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் பணமானது கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு வாகனம் பழுதடைந்ததால், உடனடியாக உடன் வந்த போலீசார் வாகனத்தை அருகில், இருந்த சித்த மருத்துவமனையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். இரண்டு வாகனங்களும்  தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நிறுத்த வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தாம்பரம் போலீசாரம் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பணத்துடன் வந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் இருக்கின்றனர்.



 

அனுமதி மறுப்பு:

 

பழுதடைந்த வாகனத்தை பழுது நீக்கும் பணியானது நடைபெற்றது. வாகனத்தை பழுது பார்க்க முடியாததால், உடனடியாக தாம்பரம் சானிடோரியம் பகுதியில் இருந்து, மீண்டும் இந்த பணத்தை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 535 கோடி ஏற்றி வந்த வாகனங்கள் பழுதடைந்து, சித்த மருத்துவமனை வளாகத்திற்குள் நிற்கவைக்கப்பட்டுள்ளதால், சித்த மருத்துவ வளாகத்திற்கு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் தாம்பரம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.  குறிப்பாக இந்த பணத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ரிசர்வ் வங்கியில் இருந்து மற்றொரு வங்கிகளுக்கு, பணத்தைக் கொண்டு செல்லும் பொழுது, வழியில் யாரும் அந்த சீலை பிரிக்க கூடாது என்பதால் ரிசர்வ் வங்கி கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண