காஞ்சிபுரம் அருகே பெரியார் நகர் பகுதியில் கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாநகராட்சி பெரியார் நகர் பகுதியில் உள்ள சுதர்சன் நகரில் வசித்து வருபவர் டேனியல் பால், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான நாகர்கோவில்  சென்று விட்டு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.



 

தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

 

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோடை விடுமுறையில் வெளியூர் சென்ற ஒரு வீடு கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

காவல்துறை கூறுவது என்ன ?

 

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், வீட்டை விட்டு வெளியூர் செல்லும் நபர்கள் ஒரு நாள் வெளியே செல்வதாக இருந்தால், கூட அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். பொதுவாக கோடை விடுமுறை நாட்களில், வெளியூர் செல்வது இயல்பை விட அதிகரிக்கும் என்பதால், இதை பயன்படுத்தி திருடர்கள் வீட்டை கொள்ளை அடிக்கும் சம்பவம் நடைபெறுகிறது.

 



எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது, தவறாமல் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லும் பட்சத்தில், அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினால் தடுக்க முடியும் என காவல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.  எனவே நீங்களும் கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்கிறார்கள் என்றால் காவல்நிலையத்தில், தகவல் தெரிவித்து விட்டுச் சென்றால் உங்கள் கோடை விடுமுறை சிறப்பாக அமையும். 

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண