கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் பல்வேறு கோவில்களில் உள்ளது.   காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வள்ளல் பச்சையப்பர் சாலையில் நமச்சிவாயா டயர் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு பின்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு மிகவும் பழமையான மடமான லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த மடம் என்பது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.





 இதற்கு சுப்பிரமணியம் என்பவர் பல ஆண்டுகளாக பராமரித்து முறையாக வரி கட்டி வருவதாகவும், பல இடங்களில் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இங்கு   நந்தி சிலை மற்றும் சிவன் கோவில் இருப்பதாகவும் இந்த கோவில் மூடி மறைக்கப்பட்டு பல ஆண்டுகளாக மூடப்பட்டு பூஜை புனஸ்காரம் எதுவும் செய்யப்படவில்லை, எனக் கூறி சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பினர் வீடியோ ஒன்றை பதிவு செய்தனர். 



இந்த வீடியோவானது தமிழகம் முழுவதும் பரவலாக பரவி அடுத்து இந்த பகுதிக்கு பொதுமக்கள் கோவிலை, பார்க்க சென்ற போது யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் இந்து அறநிலைத்துறை இதனை அறிந்து அந்தக் கடைக்கு சென்று பின்புறத்தில் உள்ள சிவாலயத்திற்கு பார்த்தபோது கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோவில் பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், முறையாக கணக்கு காட்டப்பட்டு உள்ளதாகவும் சுப்பிரமணியம் என்பவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி , இந்த கோவில் மூடப்பட்டதாக வதந்தி பரவி அடுத்து தற்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விரைவில் , இந்த கோவிலை திறப்பதற்கும் வழிபாட்டு நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


 




இதுகுறித்து அங்கிருந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் , "இப்பகுதி சுமார் 20 ஆயிரம் சதுர அடியை கொண்டது எனவும் இது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் இது எங்கள் மூதாதையர்கள் சமாதி அமைந்த இடமும், இதை தனி நபர்கள் வழிபட அனுமதி இல்லை எனவும் புகைப்படங்கள் வீடியோக்களை எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார்கள். மேலும் இதனை புனரமைக்க கடந்த ஜனவரி 25ஆம் தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.




இப்பகுதியை கல் மடம் என இவர்கள் தெரிவித்து தெரிவித்தும் லிங்காயத்து எனக்கூறப்படும் பிரிவை சார்ந்தவர்கள் என்றும் தங்கள் பிரிவை சார்ந்தவர்கள் தினந்தோறும் இங்குள்ள ஈஸ்வர லிங்கத்திற்கு பூஜை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு முறையான விளக்கங்களை அளித்துள்ளதாகவும் சரியான புரிதல் இல்லாமல் இந்த வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தரப்பிலிருந்து விளக்கங்களைப் பெற்று முறையாக இதுகுறித்து தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.