ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர்,அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவின்பொழுது வாக்காளர்கள் கையில் வைக்கப்படும் மை, பணியாளர்களின் அடையாள அட்டை, நோட்டுப் புத்தகம், பேனா உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பார்சல்கள் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும்   முழுமையாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது


05, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்டபட்ட தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயகோபால் கரோடியா பள்ளியில் இருந்து 31 மண்டலங்களில் 78 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 427 வாக்குசாவடிகளுக்கும், பல்லாவரம் சட்டமன்ற சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து 30 மண்டலங்களில் 72 வாக்குசாவடி மையங்களில் 437 வாக்குசாவடிகளுக்கும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீநிதி பெண்கள் மேல்நிலைபள்ளியில் இருந்து 30 மண்டலங்களில் 83 இடங்களில் 401 வாக்குசாவடிகளுக்கும், அம்பத்தூர் சட்டமன்ற சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரட்டுர், பக்தவச்சலம் கல்லூரி இருந்து 96 வாக்கு சாவடி மையங்களில் இருந்து 350 வாக்குசாவடிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவின்பொழுது வாக்காளர்கள் கையில் வைக்கப்படும் மை, பணியாளர்களின் அடையாள அட்டை, நோட்டுப் புத்தகம், பேனா உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பார்சல்கள் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும்   முழுமையாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.


 ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்


ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை --- 23,58,526


ஆண் வாக்காளர்கள் --11,69,344


பெண் வாக்காளர்கள் --- 11,88,754


மூன்றாம் பாலின வாக்காளர்கள் --- 428


ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 2382119 வாக்காளர்கள்.


இதில் மாற்றுத்திறனாளிகள் 7850 வாக்காளர்கள் உள்ளனர்.


வாக்குச்சாவடிகள்


ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2437 வாக்குச்சாவடிகள் உள்ளன . இதில் பதற்றமானதாக 337 வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை பொருத்தவரையில் ஒரு பெண் உள்பட 31 வேட்பாளர்கள் போட்டியிடுகிறனர்.வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கும். மத்திய பாதுகாப்பு படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இடங்களிலும் வாக்கு பதிவு குறைந்து விடக்கூடாது என்பதற்காக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.


பணியாளர்கள் - புகார்கள்


தேர்தல் பணியில் 10534 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 205 புகார்கள் வந்துள்ளது. புகார்கள் அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.


தேர்தல் பறக்கும் படை


மேலும் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1425 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு என சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு முன்பு ஒரே இடத்தில் அதிகப்படியான வாக்காளர்கள் வந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தனியாக டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பாதுகாப்பு பணியில் தீவிரம்


வாக்குப்பதிவின் பொழுது எந்தவித பதற்றமும் ஏற்படாமல் இருப்பதற்காக  போலீசார் தீவிர  கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றி திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில்  போலீசார் தீவிர   கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுபோக காஞ்சிபுரம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில்,   மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட  1020 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  இதில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 350 பேர்  என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று செங்கல்பட்டு  மாவட்ட காவல்   எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் 1677 காவல் அதிகாரிகள் காவல் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  


செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் , 225 மத்திய ஆயுத  காவல் படையினர் உட்பட  1677 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  இதே போன்று தாம்பரம் காவல்  எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்