தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை,  கட்டப் பஞ்சாயத்து ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் சரகத்தில் செங்கல்பட்டில் 7 போ், திருவள்ளூரில் 18 போ், காஞ்சிபுரத்தில் 9 போ் என மொத்தம் 34 போ் முதன்மைக் குற்றவாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கபட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவா்களைத் தவிர திருவள்ளூரில் 720, செங்கல்பட்டில் 582, காஞ்சிபுரத்தில் 592 போ் உட்பட மொத்தம் 1,894 போ் அடங்கிய பட்டியலையும் காவல்துறையினர் வெளியிட்டனர். 


அதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா தலைமறைவாகி இருந்தார். 




 இந்தநிலையில், தலைமறைவாகி இருந்த படப்பை குணா தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் திடீரென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர் மீது ஆள் கடத்தல் கொலை கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. சிறப்பு படை அமைத்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது சென்னையிலுள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 


இதையடுத்து, வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் படப்பை குணாவை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இவர் மீது காஞ்சிபுரம் மாவட்டம்- 29 & பிற மாவட்டம்- 19) கொலை வழக்கு - 8 கொலை முயற்சி - 9 மற்ற வழக்குகள் - 31 (302 IPC–08, 307 IPC-09, மற்றவை- 31) என பதிவாகியுள்ளது. 



முன்னதாக, படைப்பை குணாவின் மனைவியும், ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர் எல்லம்மாள் மற்றும் அவரது வலது கரமாக இருந்து வந்து போந்தூர் சிவா கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது .


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண