1. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மோசடி ரூ.1.64 கோடி மோசடி செய்ததாக வங்கியின் செயலாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

2. கடன் சுமை காரணமாக விழுப்புரம் ரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்து ஷேர் ஆட்டோ டிரைவர் தற்கொலை.

 

3. தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

4. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றுவதை ஏற்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்திய சரித்திரத்தில் ஒரு மாநிலத்தின்   ஆளுநர் 2 இடங்களில் தேசிய கொடியேற்றியதாக சம்பவம் நடைபெறவில்லை. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை    ஏற்று வதற்கு உரிமை உள்ளது.  அதே சமயத்தில் இரு மாநிலங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட   அரசுக்கு  அவப் பெயரை தரும் என தெரிவித்தார்.

 

5. செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

 

6. குடியரசு தினத்தையொட்டி, வேளச்சேரி ரயில் நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின், பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.நாடு முழுவதும், 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான வேளச்சேரியில், போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.



 

7. விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக டிஜிபியிடம் புகார் கூறப்பட்டுள்ளது.

 

8. தமிழ்நாடு அறிவியல் இயக்க மூத்த தலைவர்களுள் ஒருவரான சோ.சுத்தானந்தம் சென்னை தாம்பரத்தில் நேற்று காலமானார்.


9. சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர் போல் நடித்து நூதன முறையில் ஒரு லட்ச ரூபாய் திருடியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

10. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 3 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டதால், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.