காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஏரிகள் நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளை அடுத்து உள்ளதாகவும் விரைவில் அனைத்தும் நீக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும் , கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் பலநூறு ஏரிகளும் குளங்களும் உள்ளன. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான வீடியோ காணொளி கூட்டத்தில் தமிழக முதல்வர் நீர்நிலைகள் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழித்தடங்களை மீட்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அனைத்தையும் மாவட்ட வருவாய் துறை உடனடியாக கணக்கெடுப்பு செய்தது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும் ஸ்ரீபெரும்புதூர் ஏரி தற்போது பெய்த கனமழையால் முழுவதும் நிரம்பி உபரி நீர் கலங்கல் வழியாக சென்றது.
இந்த தளங்கள் பகுதி அருகே உள்ள ஓடை பகுதியில் சுருங்கி நீர் வழித்தடம் குறைந்து காணப்பட்டதால் உடனடியாக அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இன்று அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் உள்ளன, 12.45 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை இன்று இரண்டாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் கலங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அகற்றும் பணியை துவக்கி தற்போது வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்தின் அரசு மதிப்பு சுமார் 100 கோடி எனவும், மாவட்டத்தில், மேலும் பல ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவை அனைத்தும் அகற்றப்பட்டு, முதல்வரின் உத்தரவுப்படி நீர் வழித்தடங்கள் அனைத்தும் தங்குதடையின்றி செல்லும் வகையில் வழிவகை செய்யப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த, தனியார் கோயில் ஒன்றும் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தும் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை துணிந்து அகற்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்