காஞ்சிபுரத்தில் செவிலிமேடு, ஓரிக்கை,ஒலி முகமது பேட்டை,திம்ம சமுத்திரம், வையாவூர், கோனேரி குப்பம், நத்தப்பேட்டை, களியனூர், களக்காட்டூர், ஓரிக்கை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.


3 நாட்களுக்கு கனமழை அபாயம் 



இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 



காஞ்சிபுரத்தில் கனமழை


 

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை,ஒலி முகமது பேட்டை,திம்ம சமுத்திரம், வையாவூர், கோனேரி குப்பம், நத்தப்பேட்டை, களியனூர், களக்காட்டூர், ஓரிக்கை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. திடீரென பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு பணிக்குச் சென்று திரும்பிய வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்பட்டாலும் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்




வானிலை ஆராய்ச்சி மையம் கூறியது என்ன ?





29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


30.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


31.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


01.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


02.11.2023 மற்றும் 03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.