காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பல்லவர் மேடு பகுதியில் தாழ்வாக உள்ள அருந்ததியர் பாளையத்தில் மழை பெய்யும் போதெல்லாம் மழை நீர் அதிக அளவில் தேங்கி, அப்பகுதியில் செல்லும் கழிவு நீரும் கலந்து விடுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் பகுதியில் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அருந்ததியர் பாளையம் பகுதியில் மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.



 

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி வாசிகள் பல்லவர் மேடு சாலையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் செய்வதை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அருந்ததியர் பாளையம் பகுதியில் இருந்து அதிக அளவில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை துவக்கி உள்ளனர்.



 

இதுகுறித்து பகுதி பெண்கள் கூறுகையில், மழைக்காலங்களில் இவ்வாறு தண்ணீர் தேங்கி எங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கோடைகாலத்தில் பெய்யும் மழையுடன் கழிவுநீர் கலந்து பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால் அவர்கள் தண்ணீரில் இறங்கி விளையாடுவது நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்

 

வங்கக்கடலில் புயல்





 





இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  மத்திய கிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில்  11-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு  திசையில் திரும்பி  வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.


09.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


10.05.2023 முதல் 12.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


08.05.2023 முதல் 12.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4  டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.