வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அரசு ஆசிரியர்களின் விடாமுயற்சியால் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளிலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படித்து வருகிறது. இதன் காரணமாக அப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர், மாணவ மாணவிகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இரண்டாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி
இந்த நிலையில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 129 மாணவ மாணவிகளிலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற பாடத்தில் மாணவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது, ஆண்டாக 100% சதவீத தேர்ச்சி பெறுவதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர், T. மீனா குமாரி மற்றும் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பை காரணம் என்கிறார்கள், பெற்றோர்கள். கடந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சிக்கு தேர்ச்சிக்கு பிறகு, மாணவ மாணவிகளின் சேர்க்கை விகிதம் இந்த பள்ளியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே போல் இந்த ஆண்டும் மாணவ மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனவே சிறப்பாக செயல்பட்டு வரும் வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், அனைத்துவித வசதிகளையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செங்கல்பட்டு ( +2 Result)
Chengalpattu Pass Percentage, TN 12th Result 2023: செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 283. இவற்றில் அரசு, நகராட்சி மற்றும் ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளின் எண்ணிக்கை 82. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 30. மெட்ரிகுலேசன் மற்றும் சுய நிதி பள்ளிகளின் எண்ணிக்கை 171.
மாவட்ட தேர்ச்சி விவரம்
பொதுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 31,916. அதில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 29,528 பேர் மற்றும் தேர்ச்சி சதவீதம் 92.52%
இப்பொதுத் தேர்வில் மாணவர்கள் 15,149 மாணவிகள் 16,767 தேர்வு எழுதினர். இதில் 13466 மாணவர்கள், 16062 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 78.26 % மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 95.71%
பள்ளிகள் வாரியாக (அரசுப் பள்ளிகள்)
அரசு, நகராட்சி மற்றும் நலத்துறைப் பள்ளிகளைச் சார்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 12,841. இதில் 10,942 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.6%
தேர்வு எழுதிய மாணவர்கள் 5975 தேர்ச்சி பெற்றவர்கள் 4656 தேர்வு சதவீதம் 82.44%, தேர்வு எழுதிய மாணவிகள் 6866 தேர்ச்சி பெற்றவர்கள் 6286 தேர்வு சதவீதம் 90.73%