காஞ்சிபுரம் செவிலிமேட்டு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பள்ளியில் உணவு இடைவேளைக்கு உணவு அருந்தி இருந்த சிறுவர், சிறுமிகளிடம் அமர்ந்து உணவை ருசித்து அனைவரும் முட்டை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு .

 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேடு பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ளே காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.





 

"ஒழுங்காக முட்டை சாப்பிட வேண்டும் "

 

பிற்பகல் நேரத்தில் ஆய்வுக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உணவு இடைவேளையில் பள்ளியின் வளாகத்தில் உணவு உட்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளிடம் உணவின் ருசி பற்றியும் காலை இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை குறித்தும் குழந்தைகளிடம் கேட்டறிந்தார். ஒருவர் பின் ஒருவராக  உடன் சட்ட மன்ற உறுப்பினர் அமர்ந்து குழந்தைகளிடம் என்ன உணவு உட்கொள்கிறார்கள் சத்துணவு திட்டத்தில் முட்டை அளிக்கிறார்களா என கேட்டறிந்து, அதில் பல குழந்தைகள்  முட்டை அருந்தும் பழக்கம் இல்லாததால், கண்டிப்பாக அனைவரும் முட்டை அருந்த வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.


 

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண