பொதுமக்கள்  தங்கள் குடும்ப பிரச்சினைகளை தீர்க்கக்கோரி தங்கள் சமயம் சார்ந்த ஆலயங்களை தேடிச்சென்று நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் ஒரு வகையினர். இதனையும் தாண்டி கிராமப்பகுதிகளில் உள்ள அம்மன் ஆலயங்கள், கருப்புசாமி கோயில், தற்போது திருநங்கைகள் கோயில் பல இடங்களில் சென்று குறி என்னும் ஒருவகை ஜோசியம் கேட்பர்.

 

தமிழர்களின் பாரம்பரியத்தில் குறி கேட்பது, சாமியாடி அருள்வாக்கு கூறுவது உள்ளிட்டவை தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் மக்களுக்கு நல்லவற்றை போதிக்கும் விதமாகவே அருள்வாக்கு கூறுவது உள்ளிட்டவை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்பொழுது இதுபோன்று செய்யும் சாமியார்கள் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக ஒரு தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.

 

இவ்வாறு  குறி சொல்லும் சாமியார்கள் ஆடிப்பாடி சொல்பவர்கள், பெண் உடை அணிந்து சொல்பவர்கள், ஆணி காலனி அணிந்து குறி சொல்பவர்கள் , முள் படுக்கையில் படுத்துக்கொண்டு குறி சொல்பவர்கள், சுருட்டு பிடித்தபடி சொல்பவர்கள் என பலவகையினர் இருப்பதை அறிந்து இருப்பீர்கள். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சுங்கச்சாவடி அருகே உள்ள நெமிலி கிராமத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணி என்பவர் கடந்த பத்து வருடங்கள் முன்பு ஆலயம் அமைத்து குறி சொல்லும் வேலையை செய்து வருகிறார். அவ்வாறு குறி சொல்வதற்கு செவ்வாய்கிழமை ரூ 300 மற்றும் புதன்கிழமை என்றால் சிறப்பு  காணிக்கையாக ரூ1000 என  பெற்றுக்கொண்டு குறி என்ற ஜோசியம் கூறிவருகிறார்.


 

இதில் நமக்கு கிடைத்த வீடியோ ஒன்றில் குறி கேட்க வந்த நபருக்கு ஒரு ஃபுல் பாட்டில் மதுகொடுத்து நிற்காமல், குடிக்கச்சொல்லி அவருக்கு குறி சொல்லும் காட்சி  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மது அருந்தினால் இவரை உடல்நிலை அபாயநிலைக்கு செல்லும் என அறியாது, அவரும் அருந்து நிகழ்வு உயிர்பயத்தை ஏற்படுத்துகிறது. இதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடனடியாக, இதுகுறித்து காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

தற்போது சமூக வலைதளத்தில் சாமியார் மதுகுடிக்க வைத்து குறி சொல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X