காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பெருந்தேவி தாயார் விமானத்திற்கு தங்க மூலம் பூசியதில் முறைகேடு நடந்திருப்பதாக காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், இது குறித்து ஆணையரிடம் புகார் அளித்த தம்மை மிரட்டுவதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.


70-கிலோ தங்கம் வரை மோசடி


இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் டில்லிபாபு அளித்துள்ள புகார் மனுவில், சின்ன காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்குள் தாயார் தங்க விமானத்தில், தங்கமூலம் பூசப்பட்ட இடங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டு தங்க விமானம் பொலிவிழந்து காணப்பட்டது. இதை கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தோம்,  தொடர்ந்து கோயில் நிர்வாகம் தகவல் தரமறுத்து வந்தநிலையில்,  தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தோம்.  தகவல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில்,  பல அதிர்ச்சிகரமான தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதில் சுமார் 70-கிலோ தங்கம் வரை மோசடி செய்து , நகை சரிபார்ப்பாளர் அதிகாரிகள், இணைஆணையர்,  உதவி ஆணையர், செயல் அலுவலர்  ஆகியோர் கூட்டு சேர்ந்து,  இந்த தங்க மூலம் பூசும் பணி electro plating என்ற நூதன,முறையில் மிகப்பெரிய அளவில் தொடர்பான சங்கதிகள் அடங்கிய, தங்க மோசடிகளை செய்துள்ளது.


அவசர நினைவூட்டல் 


இதுகுறித்து இமெயில் மூலம் 11-04-2023 தேதி இந்து சமய அறநிலையத் துறை. இணை ஆணையருக்கு புகார் அனுப்பினோம். எங்கள் மனு மீது அவசரம் கருதி  இணை ஆணையர்,  மேற்படி மனுவின் மீது விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு, இணை ஆணையரைக் கேட்டுக் ஆணையர்  உத்தரவு பிறப்பித்தார். இன்னிலையில் மீண்டும் இந்து சமய அறத்துறை  ஆணையர்  25/4/2023 அன்று மிக அவசர நினைவூட்டல் ஒன்றை காஞ்சிபுரம் இணை ஆணையருக்கு அனுப்பினார். அதிலும் தற்போது வரை அறிக்கை வரபெறவில்லை, காலதாமதமின்றி உடன் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் மனு கொடுத்தும் 27-நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளை காப்பாற்று நோக்கத்துடனும், குற்றத்தை மூடி மறைக்கும் செயல்களை செய்து வருகின்றார். மேலும்  எங்கள் மீது  வழக்கு போடுவோம் என காஞ்சிபுரம் இணை ஆணையர் மிரட்டி எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளர். ஆகையால்  மாவட்ட ஆட்சியர், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.