காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் கோயில் வெள்ளித் தேர் உற்சவம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று இருக்க பிறகு இரண்டு ஆண்டுகாலம் நடைபெறாமல், இருந்த தேர் திருவிழா நடை பெற்று உள்ளதால் பொதுமக்கள் ஏராளமானோர் திருவிழாவை கண்டுகளித்து வருகின்றனர். அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நடைபெற்ற வெள்ளி தேர் திருவிழாவை பார்த்துவிட்டு தனது நண்பர்களுடன் l நரேஷ் (22) , கவியரசு (23), ராகுல் (16) மூன்று பேரும், காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக செல்ல முற்படும் பொழுது அடையாளம் தெரியாத ஒரு நபரின் காலை மிதித்து விட்டு வருத்தம் தெரிவித்துள்ளனர்.




பின்னர் நரசிங்கராயர் தெரு வழியாக வீட்டுக்கு செல்லும்போது, 15 பேர்கள் சேர்ந்த கும்பல் இவர்களை வழிமறித்து  தகராறு ஈடுபட்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மூன்று பேரையும் மர்ம நபர்கள் கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டி உள்ளனர். படுகாயமடைந்த 3 பேருக்கும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நரேஷ், கவியரசு ஆகிய  இருவர்  சென்னைக்கும், ராகுல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய ரவுடிகளை பிடிக்க மாவட்ட தனிப்படையினர் மற்றும் சிவகாஞ்சி காவல்துறையினர் தீவிரம் வெட்டு காயம் அடைந்தவர்களில், ஒருவரான கவியரசு என்பவர் நேஷனல் செஸ் செம்பியன் என்பதும், கோவாவில் இன்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் காஞ்சிபுரம் வந்துள்ளார் என்பதும், குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டிய நபர்கள் போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், மணிகண்டன், கார்த்திக், விக்கி மூன்று பேரும் தப்பிக்க முயற்சித்த போது கால் தவறி கீழே விழுந்ததில் 3 பேருக்கு கையில் காயம் ஏற்பட்டு மாவுக்கட்டு போட்டு போலீசார் சிகிச்சை அளித்து, தற்போது அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.




காஞ்சிபுரத்தில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதன் விளைவே, போதையில் என்ன செய்வது என்றே தெரியாமல் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு சரமாரியாக வெட்டி இருக்கிறார்கள். கஞ்சா விற்பனை போலீசார் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தில் முக்கிய ரவுடிகளாக விலகி வந்த ரவுடிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக குட்டி ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் தேர் திருவிழாவின் போது அட்டகாசம் செய்த குட்டி ரவுடிகள் கைது செய்யப்பட்டு வழுக்கி விழுந்த சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.