விழுப்புரம் மாவட்டம் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடலின் போது, ஒவ்வொருவரும் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை எளிதாக்கி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அறிவுரை வழங்கினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பேசுகையில். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணத்தை நிர்ணயிக்கும் ஆண்டாகும். அத்தகைய கால கட்டத்தில் உள்ள மாணவர்களாகிய நீங்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் வெற்றியை உரித்தாக்கி கொள்ளும் வகையில் வெற்றி இலக்குடன் திட்டமிடுதல் வேண்டும்.
Bigg Boss Ultimate | சிம்புவை சீண்டிய அனிதா .. பதம் பார்த்த ரசிகர்கள்!
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு இலட்சியம் இருக்கும், அந்த இலட்சியம் முழுமையாக வெற்றிபெற முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி உங்கள் இலட்சியம் உங்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல் உங்கள் பெற்றோருக்கும் மகிழ்ச்சியை தரும். இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களும் கூலித் தொழிலாளிகளாக இருப்பதாக தெரிவித்தீர்கள் இத்தகைய நிலையில் நீங்கள் நினைக்கும் வெற்றியை எளிதாக்குவது என்பது உங்கள் கையில் உள்ளது.
Russia Instagram Ban: “வாழ்க்கையே போய்ருச்சு..” இன்ஸ்டாகிராம் தடையால் கதறும் பிரபலங்கள்
அத்தகைய ஒரு வெற்றியை பெற்றோருக்கும் வழங்கும் வகையில் முழு மனதுடன் பாடங்களை படித்து தனது இலட்சியத்திற்கு ஏற்ப வழிகாட்டுதலை உருவாக்கி வெற்றியாளராக வேண்டும் என வாழ்த்து தெரிவித்ததுடன் அனைத்து மாணவ, மாணவியர்களுடன் உடனிருந்து “Coffee With Collector” என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன், அவர்கள் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்