தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து  காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட திமுக ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம்: செந்தில் பாலாஜியின் துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு, சிறிது நேரத்திலேயே உத்தரவை நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சரை நீக்கியது கண்டிக்கத்தக்கது என்றும், ஆளுநருக்கு அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை எனவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கண்டன போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது.



 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் எங்கள் அமைச்சரை நீக்க நீங்கள் யார் என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. " ஒன்றிய பாஜக அரசில் உள்ள 44 சதவீத அமைச்சர்கள் கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இவர்களைப் பதவியிலிருந்து விலக்கச் சொல்லி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவாரா ஆர்.என்.ரவி ?” என்று காஞ்சிபுரம் மாவட்ட தெற்கு மாவட்ட திமுக என்ற பெயரில். பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

 



 

காஞ்சிபுரம் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தது. அதேபோன்று சமூக வலைதளங்களிலும் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆளுநர் எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர