காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆனது நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை, காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்தரமேரூர் ஆகிய 5 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 274 ஊராட்சிகள் அடங்கியுள்ளன. ஊரக வெள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்கப்பட்டு, அவர்கள் பணியாற்றிய வருவதால், மாவட்டத்தில் இருக்கும் பணிகள் சற்று வேகம் எடுக்க துவங்கியுள்ளது. அதற்கேற்றார் போல் சில கிராமங்களில் குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு கிராம தலைவராக சாவித்திரி பதவி வகித்து வருகிறார். இவர் மீது அளவுக்கதிகமாக செலவு செய்ததாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணம் ஒன்று இருந்தது. குறிப்பாக, ஊராட்சிகளில் செய்த சில திட்டங்களில் முறைகேடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது 16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை, கடந்த ஒரே ஆண்டில் தாறுமாறாக செலவிட்டது தெரியவந்துள்ளது. ஊராட்சி தலைவரின் அதிகாரங்களை பறித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனுார் ஊராட்சி தலைவராக தமிழ் அமுதன் என்பவர் உள்ளார். இந்த ஊராட்சியில் விளக்குகள் வாங்கியது, மின்சாதன குப்பை வண்டி வாங்கியது, ஊராட்சி மன்ற கட்டடம் பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தது மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தது ஆகிய பணிகளுக்காக, 68 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை, செலவிட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. கலெக்டரின் உத்தரவில், ஊராட்சி சட்டம் பிரிவு 202, 203, 204 மற்றும் 205ன் கீழ், ஊராட்சி மன்ற தலைவருக்கு உண்டான, கடமை மற்றும் பொறுப்புகள், வரையறைக்குட்பட்ட சட்டப் பிரிவுக்குள் செயல்பட தவறியதால், ஊராட்சி மன்றம் தற்காலிக முடக்கம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க:உங்கள் மகனை இப்படி நடத்துவீர்களா? பயங்கரவாதி என அழைத்த பேராசிரியருக்கு இஸ்லாமிய மாணவன் சரமாரி கேள்வி..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்