சென்னை பெரும்பாக்கத்தில் தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு,பாலியல் தொல்லை கொடுத்த,அதே பள்ளியின்  ஊழியரை போலீசாா், போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் (குமார்38 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது ஐந்து வயது மகள் பெரும்பாக்கத்தில் உள்ள   தனியார் பள்ளியில் ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 


இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதியிலிருந்து அந்த சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை. தற்போது உடல்நிலை சீரடைந்த நிலையில், நேற்று காலை சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப தயாா்படுத்தினா். ஆனால் அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல பயந்து அழுதுள்ளார். அதோடு அந்த பள்ளிக்கு நான் போகமாட்டேன்,வேறு பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சிறுமி அடம்பிடித்தாா்.




மேலும் படிக்க:சென்னையில் பரபரப்பு.. பதைபதைத்த சுற்றம்.. 5-வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறுமி..




இதையடுத்து சிறுமியிடம், பெற்றோர் நைசாக பேசி விசாரித்தனா். அப்போது அந்த சிறுமியை, அந்த  பள்ளி (பியூன்) கடைநிலை ஊழியா் ராஜ்(38) என்பவா், கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து  சிறுமியின் பெற்றோா் பள்ளிக்கு சென்று புகாா் செய்தனா். ஆனால் அவா்கள் சரிவர பதில் கூறவில்லை.


இதை அடுத்து   சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பள்ளி பியூன், பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த ராஜை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.  


மேலும் படிக்க: Crime : ”எதுக்கு இப்படி கத்தி கலாட்டா பண்றீங்க” : தனியார் கல்லூரி செக்யூரிட்டி கொடூர கொலை..


மேலும் படிக்க: Liquor Smuggling: சீர்காழியில் சொகுசு காரில் சாராயம் கடத்தல் - சாராய பாட்டில்களை மண்ணில் ஊற்றி அழித்த போலீஸ்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண