காஞ்சிபுரம் மாவட்ட நியாய விலைக் கடைகள் மூலம் நடமாடும் வாகனம் மூலம் மலிவு விலை தக்காளி விற்பனை துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்று 100 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது தக்காளி விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாக தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும், வகையில் தமிழக அரசு பல்வேறு வித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒரு கிலோ 60 ரூபாய்
தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளியை வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாயவிடக் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை துவக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி , வழங்கும் மலிவு விலை தக்காளி விற்பனை திட்டத்தை எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.
நடமாடும் மலிவு விலை தக்காளி
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் நடமாடும் மலிவு விலை தக்காளி விற்பனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் துவதுவங்கியது. இச்சேவையை ஆட்சியர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மலிவு விலை தக்காளியை விற்பனை செய்தார். நடமாடும் வாகனம் மூலம் தக்காளி விற்பனை சேவையை இன்று முதல் கூட்டுறவுத் துறை தொடங்கி உள்ளது. குறிப்பாக தொடக்க கூட்டுறவு வங்கிகளின் சார்பில் மாலை நேரங்களில் சுற்றுப்புற கிராமங்களில் இச்சேவை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பாதுகாப்புடன்
மலிவு விலை தக்காளி வாங்க ஏராளமான ஆண்கள் பெண்கள் என குவிந்ததால், அங்கு காவல் துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆண்கள் பெண்கள் என இரு வரிசையில் நிற்கவைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கும் வகையில் ஒரு மணி நேரம் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த நடமாடும் வாகனம் மூலம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.