காஞ்சிபுரம் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறைதேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ்நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தகவல்.


காஞ்சிபுரம் மாவட்டமானது  தொழில் துறையில் வளர்ச்சி அடைந்து வந்தாலும்,  விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு மிகப் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட கால்நடை வளர்ப்பதை தங்களுடைய பிரதான தொழிலாக பார்த்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது எனவும் கூறலாம். அந்த அளவிற்கு காஞ்சிபுரம் மாவட்டம் கால்நடைகளை சார்ந்து இருந்து வருகிறது.


100% மானியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி


தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு இரண்டு முறை  மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100% மானியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  செப்டம்பர் மாதத்தில்  செலுத்தும் கோமாரி நோய் தடுப்பூசி ஆனது  பருவமழையை கணக்கில் கொண்டு செலுத்தப்படுகிறது.


உயிர் இழக்கும் அபாயம்
 
கோமாரி நோய் என்பது கால்களில்  வரக்கூடிய மோசமான நோய் இதன் காரணமாக மாடுகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.   தொற்று நோயாகும் இருப்பதால்,  அதை  தடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இந்த நோய் அதிக அளவு பரவும் என்பதால் அதற்காக செப்டம்பர் மாதங்களில் இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.  நோய் தொற்று உருவாகும் நேரத்தில் 21 நாட்களுக்கு முன்னதாக தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கால்நடைகள் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


கோமாரி நோய் - கால்நடை பராமரிப்புத் துறை


 காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை தடுப்பு திட்டத்தின் கீழ் நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும்பால் உற்பத்தி கடுமையாக குறைதல்மலட்டுத்தன்மைகருச்சிதைவுகால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக உள்ளதால்கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். எனவேகால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டுமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.


மேலும்இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம்நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும்தன்மை கொண்டது. மேலும்இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர்பால்உமிழ்நீர்சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.


எனவேகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 169200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுதேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 06.11.2023 முதல் 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எனவேகால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள்எருதுகள்எருமைகள் மற்றும் 4  மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.