காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த எழுச்சூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தில் குளக்கரையில் வீடு கட்டி வசித்து வருபவர் நாராயணன். இவர் நேற்றிரவு தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளோடு உறங்கி கொண்டிருந்தபொழுது இரண்டாவது மகளான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தீபா (16) போர்வைக்குள் ஏதோ ஊர்வது போல் தெரிந்துள்ளது. உடனே தீபா அலறி அடித்து சத்தம் போட்டுள்ளார்.



இதை பார்த்த நாராயணன் போர்வை எடுத்து பார்த்தபொழுது , போர்வையின் உள்ளே கட்டுவிரியன் பாம்பு இருந்துள்ளது. கட்டு விரியன் பாம்பை பார்த்து அதிர்ந்து போன நாராயணன் பாம்பை அடித்து கொன்று அப்புறப்படுத்தியுள்ளார். நீ பாவை பாம்பு எங்கேயாவது கடித்து இருக்கிறதா என சோதனை செய்துள்ளனர் அவருடைய பெற்றோர். ஆனால் அது போன்று எங்கேயும் பாம்பு கிடைக்கவில்லை என தீபா கூறியுள்ளார்.  ஆனால், ஏற்கனவே கட்டுவிரியன் பாம்பு தீபாவின் தொடையில் கடித்தது தெரியாமலேயே தூக்க கலக்கத்தில் இருந்த தீபா உறங்கியுள்ளார் . 



 

இந்நிலையில் பின்பு காலையில் எழுந்து பார்க்கும்போது, தீபா முகம் வீங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீபாவை பரிசோதனை மருத்துவர் தீபா ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.



 

உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற ஒரகடம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 15 வயது பள்ளி மாணவி கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பாம்பை பெற்றோர்கள் பார்த்தும் மாணவியை பாம்பு கடித்து இருக்கிறதா என்பதை பரிசோதிக்க காரணத்தினால், கடைசி கட்டத்தில் மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தும் காப்பாற்ற முடியாமல் போனதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் உறவினர்கள். பாம்பு கடித்து ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.