விவசாயிகள் குறைதீர் நாள்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், தங்கள் விவசாய பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக புகார் தெரிவித்தார். அப்பொழுது, மின்சார துறை அதிகாரி சற்று விவசாயிகள் கூறும் புகாரை அலட்சியமாக எடுத்துக் கொண்டு சிரித்ததால், மாவட்ட ஆட்சியர் கடும் கோபம் அடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைந்துள்ள மக்கள் நல்லூறவு கூட்ட அரங்கில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக பெறப்பட்டு அதன்படி தீர்வு காணப்படும்.
சாய்ந்த மின் கம்பங்கள்
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாய குறைத்தீர் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் உள்ள அனைத்து, விவசாயிகளும் ஒன்றிணைந்து தங்கள் வழங்கிய மனுக்கள் மீது அரசு அலுவலர்களிடம் பல்வேறு தீர்வுகளை பெற்றனர். அந்த வரிசையில் உத்திரமேரூர் வட்டாரத்துக்கு , உட்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் மழையின் காரணமாக சாய்ந்த மின் கம்பங்கள் , இன்னும் சரி செய்யப்படாமல் மின்சாரம் வழங்குவதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்சார மோட்டார்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறைதீர் நாள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
கோவத்தில் கொந்தளித்த காஞ்சி ஆட்சியர்
அவற்றிற்கு பதில் அளிக்க மின்சார துறை சம்பந்தமாக உதவி செயற்பொறியாளர் பதில் அளிக்கையில், விவசாயிகளின் புகாருக்கு அலட்சியமாக சிரித்தபடி பதில் அளித்ததால், மாவட்ட ஆட்சியர் கோபம் கொண்டு விவசாயிகள் குறைகூறும் வேளையில் , நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் அவர்களை கிண்டல் செய்வது போல இருக்கிறது. எனவே உரிய பதில் மட்டும் அளியுங்கள் சிரிப்பை நிப்பாட்டுங்கள் என கடும் கோபத்துடன் எச்சரித்தார். இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்