Chennai Traffic Diversion:  திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற உள்ளதால் சென்னை அண்ணாசாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


போக்குவரத்து மாற்றம்:


சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில்,  திமுகவின் மவுன ஊர்வலத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் நாளை போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


எங்கு தெரியுமா?


இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் நாளை காலை 8 மணியளவில் அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை மவுள ஊர்வலம் செல்கின்றனர்.


இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடிமரச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.  காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு,  திருப்பி  விடப்படும்.


மவுன ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது வாகனங்கள் அண்ணா சாலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ்' பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிடலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


கருணாநிதி நூற்றாண்டு விழா.. பிரமாண்டமான நடைபெற்ற மாரத்தான் போட்டி.. 73 ஆயிரம் பேர் பங்கேற்பு