வலுப்பெறும் பருவமழை: 100% நிரம்பிய 167 ஏரிகள்.. காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் பட்டியல் இதோ..

Kanchipuram Lake : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவ மழை எதிரொலியாக பல்வேறு ஏரிகள் நிரம்பி உள்ளது.

Continues below advertisement

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக அவ்வப்பொழுது கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் நீர் மட்டும் உயர்ந்து வருகிறது.  பல்வேறு  ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களிலும் நீர் செல்வதால்  சிறிய ஏரிகள் பலவும் வேகமாக நிரம்பி வருகின்றன.  

Continues below advertisement

காஞ்சிபுரம் - பொதுப்பணி துறை

காஞ்சிபுரம், பொதுப்பணி துறை, கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ,திருவண்ணாமலை ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1022 ஏரிகளில், 167 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது,  அதேபோன்று 76 சதவீதத்திலிருந்து 99 சதவீத நீரை எட்டியுள்ள ஏரிகளின் விவரம் 195 ஏரிகளாக உள்ளது.  51% இருந்து 75%  270 ஏரிகள் நிரம்பியுள்ளன  26 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் 284ஏரிகளும்,  25 சதவீதத்திற்கு 106 ஏரிகளும் நிரம்பியுள்ளன.  1022 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு உள்ளது  முழுமையாக வட்டியை ஏரிகளின் விவரம் பூஜ்ஜியமாகவே உள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஏரிகளிலும் குறைந்தபட்ச நீர் இருப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது

காஞ்சி, செங்கை மாவட்ட ஏரிகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 45 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 108 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 ஏரிகளில் 6 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 93 ஏரிகளில் 8 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரிகள் மிக வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்திரமேரூர் ஏரியின் நிலவரம் என்ன ? ( uthiramerur lake )

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக உத்திரமேரூர் ஏரி இருந்து வருகிறது. உத்திரமேரூர் ஏரியின்  மொத்த அடி 20 அடி அதில் 18.50 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவில் 92.50 சதவீதம் தண்ணீர் எட்டி உள்ளது. உத்திரமேரூர் ஏரி 90%க்கு மேல் நிரம்பியுள்ளதால் கடல்போல் காட்சி அளித்து வருகிறது.

மழைஎச்சரிக்கை:

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

27.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

28.11.2023 முதல் 02.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னையில் மழைக்கான வாய்ப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்க கடல் பகுதிகள்:

27.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


28.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள்,  தென்கிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Continues below advertisement