திராவிடம் என கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றும் திமுக - ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இரண்டாவது முறையாக பதிலளிக்காமல் சென்றார் ஜெயக்குமார்.

Continues below advertisement

நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார்

Continues below advertisement

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஜார்ஜ்டவுனில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பாக நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்; 

உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவை சேர்ந்த நபரை போலீஸிடம் ஒப்படைத்தோம். ஆனால் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் என் மீது பொய் வழக்கு புனையப்பட்டு , 22 நாட்கள் புழல் மற்றும் பூந்தமல்லி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்காமல் அதன் பின்பு வழக்கறிஞர்கள் எடுத்துரைத்த பிறகு முதல் வகுப்பு கொடுத்தார்கள். ஆனால் அதிலும் எந்த விதமான சலுகைகளும் கிடையாது. பொய் வழக்கு புனையபட்டு நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக இன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளேன்.

மாநில சுயாட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , 

யார் எந்த தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற, ஒன்று இல்லாமல் போச்சு. இவர்கள் கண்ணாடி முன் நின்று தங்களை கேட்டுக் கொள்ள வேண்டும். தீர்மானம் போடுவதற்கு நாம் தகுதி ஆனவர்களா என்று, அன்றைக்கு சர்க்காரியா கமிட்டிக்கும் பயந்து இந்திரா காந்தி அம்மையாருடன் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தார்கள் இன்றைக்கும் மீனவர்கள் சிறையில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது முதலை கண்ணீர் வடிப்பது போல கச்சத்தீவு தாரைவார்த்து விட்டு இப்போது தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.

மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் தாரைவார்த்துவிட்டு இன்றைக்கு தேர்தல் வருகிறது என்பதற்காக மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வருகிறார்கள். இதனை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். திராவிடம் என கூறிக் கொண்டு மக்களை ஏமாற்ற ஒரு மோசமான செயல் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola