மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக சமூக வலைதள பக்கங்களில் வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்து இருந்தார்.
இந்நிலையில், இந்த மிரட்டல் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக கலங்கரை விளக்கம் மற்றும் கடல்வழி பாதுகாப்பு துறையினர் சென்னை காவல்துறையினரை தொடர்புகொண்டு புகார் செய்தனர்.
இதை தொடர்ந்து, இது குறித்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் விரைந்து வந்து கலங்கரை விளக்கத்தில் சோதனை நடத்தினர். நேற்று இரவு 10 மணியில் இருந்து விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கலங்கரை விளக்கம் முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.இருப்பினும் கலங்கரை விளக்கம் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினா போலீசார் ஆயுதப்படை காவலரின் உதவியுடன் கலங்கரை விளக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் நுழைவு வாசல் பகுதியில் பூட்டு போடப்பட்டுள்ளது. அங்கு மெரினா போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரையாது கண்டால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல் விடுத்த வாலிபர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் கலங்கரை விளக்க போட்டோக்களை பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராம் குறியீட்டு எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை சைபர் க்ரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.
Trade Union Strike: தமிழ்நாட்டில் பந்த்: 90% பேருந்துகள் இயங்கவில்லை: பொதுமக்கள் அவதி
CSK Vs KKR 2022: முதல் மேட்ச்லயே தோல்வி.. அப்போ கப் நமக்கு தான்.. CSK வரலாறு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சார் முடக்கி உள்ளனர். மேலும், க்யூ பிரிவு போலீசார் மிரட்டல் விட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.