செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை, செங்கல்பட்டு நகர பகுதியில் உள்ள ஜே சி கே நகர் பூங்கா, புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சித்த யோகா மையம், அரசு தலைமை மருத்துவமனை, உள்ளிட்ட பகுதிகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டார்.




பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கொரொனா சிகிச்சை மையம், அவசர சிகிச்சைமையம், மற்றும்  பிரசவ வார்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்டோர் கழிவறை, படுக்கை, உள்ளிட்ட எந்த வசதியும் இங்கு இல்லை, கொசுத்தொல்லை காரணமாக குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும்  கடுமையான உடல் உபாதைகள் ஏற்படுகிறது. 




எத்தனை முறை புகார் அளித்தாலும் அதன்மீது நடவடிக்கை இல்லை என கூறி தலைமைச் செயலாளர் இறையன்பு விடம் சரமாரி புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வரலாறு சிறப்பு மருத்துவமனையாக இருந்து வந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது




இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 இடங்களில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார் செங்கல்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வரும் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அரசு ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனை அடுத்து பொதுமக்களின் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.


புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் வளாக கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் கட்டுமான பணிகளை உடனடியாக முடித்து அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இடைவெளியில் கட்டப்பட்டு வரும் பழங்குடி மக்களின் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் அதனை அடுத்து சிங்கப்பெருமாள் கோவிலில் கட்டப்பட்ட வரும்  கட்டுமானத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண