சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 2ஆவது டி20 போட்டியை காண வரும் ரசிகர்களும், போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மெட்ரோ ரயில் இலவசம்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மூத்த வீரர்கள் இல்லாத, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணி களம் இறங்க இருக்கிறது.


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ஆம் தேதியும், மூன்றாவது போட்டி குஜராத் ராஜ்கோட்டில் வரும் 28ஆம் தேதியும் நடைபெறுகிறது.


இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி:


வரும் 31ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நான்காவது போட்டியும் வரும் பிப்ரவரி மாதம், 2ஆம் தேதி, மும்பை வான்கடே மைதானத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியும் நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 2ஆவது போட்டியை காண வரும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 






அதோடு, போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களும் சென்னை மெட்ரோ ரயிலை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் சேவையை பார்வையாளர்கள் இலவசமாகப் பயன்படுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்போர், இதனை பயன்படுத்தி கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்