எம்ஜிஎம் குழுமம் பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் எம்ஜிஎம் குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. சென்னை , நெல்லை , பெங்களூரு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மிகப் பிரதான தீம் பார்க் ஆக எம்ஜிஎம் இருந்து வருகிறது. அதேபோல நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் இன்று காவல்துறையினர் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடன் பாதுகாப்புடன், இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 15 மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலகம் பூட்டி இருப்பதால் அலுவலகம் வெளியில் காத்திருக்கின்றனர். சென்னை ராயப்பேட்டையில் வருமான வரித்துறை அதிகாரிகள் காத்திருப்புக்கு முக்கிய காரணமாக இதுவரை ஊழியர்கள் யாரும் வராததால், அக்சஸ் கார்டு ஆகியவை கிடைக்காமல் ராயப்பேட்டை நிறுவனம் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல ராயப்பேட்டையில் உள்ள மற்றொரு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடைபெற்று. எம்ஜிஎம் இயக்குனர் நேசமணிமாறன் முத்து தொடர்புடைய இடங்களிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. வீடுகள் அதேபோல எம்ஜிஎம் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளின் சொந்தமான இடங்கள் ஆகிய பகுதிகளில் சோதனையானது நடைபெற்று வருகிறது.
ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு குறித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதுதான் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை துவங்கியிருக்கும் காரணத்தினால் , சோதனை முடிவிற்குப் பிறகு என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது, எதற்காக இந்த அதிரடி சோதனை நடைபெற்றது என்பது குறித்த முழு தகவல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்