திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா பழைய காவல்நிலையத்திற்கு பின்புறம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது (42). இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மணிகண்டன் சொந்தவேலையாக நேற்று மாலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் வேலூர் சாலையில் பச்சையம்மன் கோவில் அருகில் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் விலையுயர்ந்த கேடிஎம் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர். அப்போது காரை இளைஞர் மோதுவது போன்று வந்ததால் காரை மணிகண்டன் நிறுத்தியுள்ளார். பின்னர் இளைஞர்கள் திடீரென பைக்கை நிறுத்திவிட்டு மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கார் கண்ணாடியை உடைத்து மணிகண்டனையும் தாக்கியுள்ளனர்.


 




பின்னர் அந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனிடம் பணம் பறித்தாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் தகராறில் ஈடுட்ட அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது இளைஞர்கள் தன்னுடைய பைக்கை அங்கேயே விட்டு விட்டு தப்பித்து விட்டனர். அதன்பிறகு அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பொதுமக்கள் கூட்டமாக உள்ளதை கண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர்கள் விட்டுச்சென்ற பைக்கை எடுக்க முயன்றனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து கிழக்கு காவல்துறையினர் பிடிப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த இளைஞர் திருவண்ணாமலை சிவசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சந்துரு வயது (23) என்றும் அவர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த இளைஞர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


 




 


இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுகையில்; 


நேற்று இரவு திடிரென தமிழ்நாடு ஓட்டல்ல எதிரே கஞ்சா போதையில் இரண்டு வாலிபர்கள் கார் கண்ணாடியை உடைத்து கார் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுட்டு இருந்தனர். அப்போது நாங்கள் இரண்டு வாலிபர்களை பிடிக்க முயன்றோம் ஆனால் அந்த வாலிபர்கள் தப்பித்து விட்டனர். அதன்பிறகு பைகை எடுக்க வந்த வாலிபரை பிடித்தோம், அப்போது மற்றொரு வாலிபர் தப்பித்து ஓடிவிட்டார் பிடிப்பட்ட வாலிபரை காவல்துறையினரிடம் ஒப்படித்தோம், அந்த வாலிபர் பொதுமக்களை பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் உடனடியாக வாலிபருக்கு தர்ம அடிகொடுத்தோம், காவல்துறையினர் உடனடியாக வாலிபரை ஜீப்பில் ஏற்றினர்.


 


 




ஆனால் அந்த வாலிபர் அடங்காமல் மீண்டும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார் மேலும் காவல்துறையினர் ஜீப்பில் இருந்த போதும் பொதுமக்கள் வாலிருக்கு அடிக்கொடுத்தனர். பின்னர் காவல்துறையினர் அங்கிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதே போன்று இந்த வாலிபர் அடிக்கடி கஞ்சா பயன்பாடுத்தி விட்டு இந்தப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தகராறில் ஈடுட்டுவார் என்று தெரிவித்தனர்.வாலிபர கஞ்ச போதையில் கத்தியை காட்டி கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.