கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு அதிரடி சோதனைகளில் வருமானத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை முதல் சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னையில் மூன்று இடங்களில் கவர்ளால் பஜ்ஜிலால் என்ற கெமிக்கல் நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களில் பாம்பே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், ஓஷன் லைவ் ஸ்பேஸ் என்ற கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் உரிமையாளர் எஸ் கே பீட்டர் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளவர். சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் 50 கோடி ரூபாய் இந்த நிறுவன உரிமையாளரிடம் கட்டப்பஞ்சாயத்து பேசி வழக்கு ஒன்றில் வாங்கியதாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 


ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஓசன் லைப் ஸ்பேஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் கே பீட்டர் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டும்  நிறுவனத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்கே பீட்டர் தொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.