பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னையை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றன. 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் படையெடுக்க தொடங்கினர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 


இந்தாண்டும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் ஏதுவாக செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து பண்டிகை காலத்திலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் மக்கள், இந்தாண்டும் கிளாம்பாக்கமா..? கோயம்பேடா..? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் அதிவிரைவு பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் என்றும், மற்ற சாதாரண, டி.என்.எஸ்.டி.சி பேருந்துகளில் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே சொந்த ஊருக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 


இந்தநிலையில், மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று இரவு தென்மாவட்டங்கள், கடலூர், பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் என சென்னையில் வேலை பார்க்கும் அனைவரும் தற்போது சென்னைக்கு திரும்பி வருகின்றன. இதன் காரணமாக செங்கல்பட்டு டோல்கேட் முதல் தாம்பரம் வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 


சென்னைக்கு வரும் பயணிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் திரும்புகின்றன. இதன் காரணமாக, செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் அனைத்து மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. 


இன்று முதல் பள்ளிகள் திறப்பு:


சென்னை வந்தபிறகு, தாங்கள் அன்றாட வாழக்கை தொடர வேண்டும் என்று நினைக்கும் மக்கள், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வந்துவிட முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் சனி, ஞாயிறு கிழமைகளுக்குப் பிறகு திங்கள் அன்று பொங்கல் பண்டிகை வந்ததால், பள்ளி  மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு இன்று (ஜன.17) தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


இதையடுத்து, சென்னையில் படிக்கும் தங்கள் குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு அழைத்து செல்ல முடியுமா என்ற அசத்ததில் பெற்றோர்கள் உள்ளனர். 


10 லட்சம் பேர் சென்னைக்கு வருகை: 


பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக மக்கள் முன் பதிவு செய்தும் திரும்பி வருகின்றன. பேருந்துகளில் மட்டுமல்லாமல் சொந்த வாகனங்கள், ரயில் மற்றும் பிற போக்குவரத்து மூலம் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்னையை நோக்கி வருகின்றன. 


இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தமாக 19,484 சிறப்பு பேருந்துகளும், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும் சுமார் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.