கிளியாறு (கீழ் பாலாறு) படிநிலை உப கோட்டத்தில் உள்ள 262 ஏரிகளில் 121 ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. சென்னையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் எம். காசிமாயன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பாலாறு ஏரிகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக  பொதுப்பணித்துறையினரிடம்  கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில் இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலாறு வடிநில கோட்ட பிரிவின் சுமார் 925 ஏரிகள் உள்ளன. அவ்வாறு உள்ள 925 ஏரிகளில் சுமார் 21 ஆயிரத்து 498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எம்.காசிமாயன்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஏரிகளின் விவரங்களை அளிக்குமாறு கூறி இருந்தார்.



கீழ்பாலாறு வடிநில உபகோட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  மதுராந்தகம் என மூன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் மதுராந்தகத்தின் கட்டுபாட்டில் உள்ள மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 262 ஏரிகள் உள்ளதாகவும், இதில் ஆக்கிரமிப்புக்கு  தற்போது வரை ஆக்கிரமிப்பில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 121.   மதுராந்தகம் உப கோட்டத்தில் கட்டுப்பாட்டிலுள்ள 46 சதவீதம் ஏரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 



மதுராந்தகம் பகுதியில் சுமார் 29 ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய ஏரிகள் ஆன மதுராந்தகம் ஏரி, பள்ளிப்பட்டு ஏரி, ஜமீன் எண்டத்தூர் ஏரி, கீழவலம் ஏரி ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்யூர் பகுதியில் 21 ஏரிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்யூர் பெரிய ஏரி, பொந்துர் ஏரி, கல்லகுளம் ஏரி , செங்காதுர் ஏரி ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக அச்சரப்பாக்கத்தில் மட்டும்   உள்ள மொத்தம் 101 ஏரிகள் உள்ளன, இதில்  71 ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அச்சரப்பாக்கம் பகுதியிலுள்ள கீழ் மருவத்தூர், பெருங்கருணை, மதூர் , ஒரத்தி உள்ளிட்ட ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பின்னர், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.



 

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் 2015 முதல் தற்போது வரை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் என கேட்டிருந்த கேள்விக்கு "ஏதுமில்லை"  என கிளியாறு வடிநில உபகோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் 2015 முதல் தற்போது வரை ஆக்கிரமிப்பு செய்துள்ள அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த காரணத்தினால் அகற்றப்படாமல் உள்ள வழக்கு நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு பற்றிய ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் அளவு இடத்தின் மதிப்பு ஆக்கிரமிப்பு செய்தவர்களின் பெயர் விவரம் போன்ற தகவல்களை வழங்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்  "ஏதுமில்லை"  என கிளியாறு வடிநில உபகோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 



மூன்று மாவட்டங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட இருந்த, கேள்வியில் முதற்கட்ட தகவல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது இருக்கிறது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உப கோட்டத்தில் இருந்து பதில்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று நீர் நிலைகளில் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், விடுவதால் மழை காலத்தில் அதிக அளவு மழை பெய்யும்போது வெள்ளை ஊருக்குள் புகுந்து மிக அளவு பாதிப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.