காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தனியார் தொழிற்சாலை அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரவில்லை. கொடுக்கப்பட்ட உணவு நஞ்சானதால் சக பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முறையிட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் முதல் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் பெண்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வந்து விளக்கங்கள் அளித்ததோடு, வதந்திகளை நம்ப வேண்டாம் என சிகிச்சை பெற்றுவரும் இரண்டு பெண்களிடம் வீடியோ காலில் பேசியும் அங்குப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை.
தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இப்படி தொடர் பேச்சுவார்த்தைகள் மூலமே போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட முக்கிய காரணமாக இருந்த 22 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்பத்தூர் அருகே தனியார் ஆலை தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சக்தி கிச்சன் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிபின்(34) மற்றும் கவியரசன்(32) ஆகிய இருவரையும் வெள்ளவேடு போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி விடுதியில் தொழிலாளர்களுக்கு இடம் அளித்த மேலாளர் செந்தில்குமார், ஹேமலதா மற்றும் சமையலர் முனுசாமி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேலும் தங்கும் விடுதி நடத்தி வரும் சதாசிவம் தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..