செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு  சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள், அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  இன்று (27.12.2022) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.




 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பேசியதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் நல்ல நோக்கில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின்  முன்னிலையில் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, அந்த மனுக்களை துறைவாரியாக பிரித்து அனுப்பி அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் இன்றைய தினம் (27.12.2022) முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுக்கள் பெறப்படுகின்றது.


இந்த மனுக்களை துறைவாரியாக பிரித்து அனுப்ப தனி சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்து மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்வு காணக்கூடிய மனுக்கள் மீது உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் நிதி ஆதாரத்தை கணக்கில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்படும்.


இன்று  நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில் 91 மனுக்களை உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும்  பொது மக்களின் கோரிக்கை மனுக்களாக  பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள்,  வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும், குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரிசெய்ய வேண்டும்,  மின்கம்பங்களை மாற்றப்பட வேண்டும்,  சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின்அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரிசெய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இன்றை தினம் பெறப்பட்டுள்ளது.


நாம் அறிந்திடாத சில பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலவலர்களுக்கு  அனுப்பப்பட்டு, தேவையான நேரங்களில் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்  தெரிவித்தார்.




இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் கோட்டம், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட  திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு  ஆகிய  பகுதிகளில்  135 பயனாளிகளுக்கு அரசு மானியமாக  வழங்கும் ரூ.2.10 இலட்சம்  வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை   அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்  வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மா.நாராயணன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் செம்பருத்தி துர்கேஷ்,   திருக்கழுக்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.டி.அரசு , புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்  சங்கீதா பாரதிராஜா, செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர்தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற தலைவர்  சண்முகம்    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.