பராமரிப்பு பணி காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. 



அந்த அறிக்கையில், “ திருவள்ளூர் இடையே (43705) காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே  ( 43753,43109) காலை 10.05,11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட் - ஆவடி ( 43013,43015, 43017) காலை 10.15, 10.45. 12.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் - கடம்பத்தூர் இடையே இயக்கப்படும் (43901,43903) காலை 10.30, 12.10 மணி ரயில், மூர்மார்க்கெட் -அரக்கோணம் இடையே (43413,43415) காலை 11.00, 12.30 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை ஆவடி இடையே (43605) காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் , மூர்மார்க்கெட் - திருவள்ளூர் இடையே (43221,43223,43225) காலை 11.30,  12,1 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் திருத்தணி இடையே (43821)  மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் (43111) மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படும் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.