1. காஞ்சிபுரம் வாலாஜாபாதில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த காரை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 7.5 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

 

2.  திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

 



 3. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலலில் திமுக முக்கிய பிரமுகர்கள் மனைவிகளுக்கும், முன்னால் சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

 

4. காஞ்சிபுரம் பெய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகுவின் தாய் பவானியை (54), சட்டத்திற்கு புறப்பாக கஞ்சா விற்பனை செய்ததாக, விஷ்ணு காஞ்சி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பவானி மீது சூதாட்டத்தில் ஈடுபட்டது, லாட்டரி சீட்டு விற்பனை உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

 

 

5. தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் முறையாக பணி செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை செய்யும் வாக்கி டாக்கி ஆடியோ வெளியாகி காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

6. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆங்கில ஆசிரியர் வேண்டி அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 

7. சென்னையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.06 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

8. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில், திமுகவின் சென்னை மடிப்பாக்கம் வட்ட செயலாளர் செல்வம் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

 

9. சென்னையில் தலைமுடி மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 22.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான 525 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 



10. சென்னை காசிமேட்டைச் சோந்த மீனவா்கள் நடுக்கடலில் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மீனவா்களை தாக்கி, ரூ.1 லட்சம் மதிப்புள்ள வயா்லஸ் கருவியை பறித்துள்ளனனா். பின்னா் அந்த நபா்கள், விசைப்படகை உடைத்துவிட்டு தப்பியோடினா்.